இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை தரைமட்டமானது அதில் இருந்த நோயாளிகள்,ஊழியர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்
6.2 ரிக்டர் அலகு பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான ஆட்டம் கண்டன . பொதுமக்கள் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.