![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Fisherman-e1610556708958.jpg)
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 26 மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் இனி ஓராண்டு சிறை தண்டனை என எச்சரித்து இலங்கை நீதி மன்றம் விடுதலை செய்துள்ளனர்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அண்மையில் இலங்கை சென்ற போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.