தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டுடன் போட்டியிட்டார் . 78 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16,24-26, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார். கொரோனா பரவல் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்தது மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளது .