டிரம்பிற்கு எதிராக யூரியூப்பும் நடவடிக்கை

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி 6-ஆம் தேதி ஆயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்
இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் போலீஸ் அலுவலகங்கள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது.
ஜோ பைடன் வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவி பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அதே நாளில் அல்லது அதற்குறப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
டுவிட்டர், முகநூல், இன்ட்ஸ்டாகிராமைத் தொடர்ந்து தற்போது யூரியூப் நிறுவனமும் டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூரியூப் நிறுவனம் நீக்கியது.
வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததாலும் அதனை நீக்கியதாக யூரியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *