![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/India-vs-aus.jpg)
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும், முகமது சிராஜும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள்.
4-வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடியை சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் பிரித்தார். வார்னர் 5 ரன்னில் அவரது பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.அப்போது ஸ்கோர் 6 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு புகோவ்ஸ்கியுடன் மார்னஸ் லபுசேன் ஜோடி சேர்ந்தார்.ஆஸ்திரேலிய அணி 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய ஆஸ்திரேலுயா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.