அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறி தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை.
இது தொடர்பாக டிரம்ப் நீதி மன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் மூலம் டிரம்பின் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தது.எனினும் டிரம்ப் தொடர்ந்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வந்தார். அதேபோல் அவரது ஆதரவாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகளை பாராளுமன்றம் மேற்கொண்டது.
இதையடுத்து தேர்தலில் வென்ற மாகாண சபை உறுப்பினர்கள் அதிபரை தேர்வு செய்வதற்கான தங்களது வாக்குகளை கடந்த டிசம்பர் 14-ந் தேதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவரில் அனுப்பி வைத்தனர்.அந்த வாக்குகள் எண்ணப்படுவதற்காக அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான கேப்பிடல் கட்டிடத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.இந்த பணிகளை தடுப்பதற்காக, டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.வரலாற்றில் இல்லாத அளவில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாகினர்.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்கள் அவரது கணக்கை தற்காலிகமாக முடக்கியது. தற்போது காலவரையின்றி முடக்கத்தை நீட்டித்துள்ளது .ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளதால் வரும் 21-ந்தேதி வரை இந்த தடை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .