உலகின் தலைசிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களில் ஒருவர் ரொஜர் பெடரர்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர், அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்.
இந் நிலையில் அண்மையில் பெடரர் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவுஸ்திரேலியா ஓபனுக்கு டென்னிஸ் போட்டிக்கு தயாராக நேரம் போதவில்லை என கூறி 2021 சீசனில் இருந்து விலகியுள்ளார்.
இவ் வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலியா ஓபனில் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சிடம் அவர் தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.