ரஜினிகாந்த் இன்று தான் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ஒரு நீண்ட அறிக்கையை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் கட்சி தொடங்கவில்லை. கட்சி ஆரம்பித்து அரசியலுக்க வரமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார். இது ரஜினிரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ரஜினிகாந்த் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதை பார்ப்போம்.
கமல்ஹாசன்: ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்தாலும், அவரது ஆரோக்கியமே எனக்கு முக்கியம். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை சந்திப்பேன்
ஜி.கே.வாசன்(தா.ம.க ) : ரஜினிகாந்த் மக்கள் நலன் கருதி நல்லவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்
அமைச்சர் ஜெயக்குமார் (அதிமுக ): ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்
சீமான்(நம் தமிழர் ): ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்
பொன்முடி(திமுக): உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலை விட்டு விலகியிருப்பது நல்லதுதான்
அன்வர் ராஜா(அதிமுக): அதிமுக ஆட்சியை ஆதரிப்பார் ரஜினி
தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் ): வறட்டு கவுரவம் பார்க்காமல் ரஜினிகாந்த் ஒரு துணிச்சலான முடிவை நான் வரவேற்கிறேன்
ஆடிட்டர் குருமூர்த்தி(துக்ளக் ஆசிரியர் ): ரஜினி 1996 போலவே ‘வாய்ஸ்’ அரசியலில் ஈடுபடுவார்