புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் வெளிநாடுகளில் புதுவகை கொரோனா வைரஸ் இன்னும் வீரியமாக பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கும். எனவே வெளிநாட்டு திரையீட்டு உரிமையும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஆனால் இந்த பொதுமுடக்கத்தால் அடுத்த சில வராங்களுக்கு திட்டமிடப்பட்டு இருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. லாபத்தில் கணிசமாக பாதிக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.