இலங்கையில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் தொடர்பில் போலிச்செய்திகளை உருவாக்கவேண்டாம் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோhனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமை அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பில்
போலியான பல அரசியல்வாதிகளும் இணையத்தளங்களும் போலியான செய்திகளை பரப்புவதை அவதானிக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் இதுவரையில் தகனம் செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.