இலங்கை விமான நிலையம் வரும் 26 ஆம் திகதி முதல் திறக்கப்படுவதால் வெளிநாடு வாழ் இலங்கையர் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வரலாம் என சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் அறிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரும் வழமை போன்று நாட்டுக்குள் பிரவேசிக்கலாம் எனினும் சுகாதார நடைமுறைகள் நன்கு கடைப்பிடிக்கப்படும் எனவும் நாட்டுக்கு வரும் அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனை செய்யப்படும். ஒரு நாளைக்கு 3500 விமான பயணிகளுக்கு பி சி ஆர் பரிசோதனை செய்ய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தலை உரிய தரப்பிற்கு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் விமான நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.