இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 380,166 ஆக அதிகரித்துள்ளது.