பொதுமக்கள் புகார் எதிரொலி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 600 பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்க இலங்கை அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லஞ்சம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களைப் பரிசீலித்த பின்னரே அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று அதன் ஆணையர் தெரிவித்தார்.குறித்த இடமாற்றங்கள் பல கட்டங்களாகச் செயற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.