இலங்கையில் நேற்றைய தினம் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.31 பெண்களும் மற்றும் 16 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,077 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 258,405 ஆக அதிகரித்துள்ளது.