இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படம் ‘சைக்கோ’. இப்படம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020 (SIIMA 2020) திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (Double Meaning Productions), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்). ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் சைக்கோ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9 வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.