70 சதவீத அமெரிக்கர்களுக்கு ஜூலை 4 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட இலக்கு – ஜோ பைடன்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன், ஜூலை 4 ஆம் தேதிக்குள் வயது வந்த அமெரிக்கர்களில் 70 சதவீதத்தினருக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்துவதையும், 16 கோடி அமெரிக்கர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்துவதையும் குறிக்கோளாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, இந்தியா மற்றும் பிரேசிலுக்கு உதவி வருவதாக குறிப்பிட்ட ஜே பைடன். பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, இந்தியாவிற்கு தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *