இந்தோனேஷியாவின் ஸ்ரீவிஜயா விமானம் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்தில் அந்த விமானம் மறைந்ததாகவும் அது விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஸ்ரீவிஜயா என்ற விமானம் காலை 7.40 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான கண்காணிப்பை இழந்தது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 59 பேர் இருந்தனர். விமானத்தில் இருந்த 59 பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை.