சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கசக்கஸ்தான் நாட்டில் இருந்து முதலாவது சுற்றுலா குழு 164 சுற்றுலா பயணிகளுடன் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.கசக்கஸ்தானில் இருந்து இலங்கைக்கு கிழமைக்கு இரண்டு விமான சேவையை தொடங்க உள்ளது.அதன் அடிப்படையில் , ஏர் அஸ்தானா விமானம் ஒவ்வொரு சனிக்கிழமையும் இயங்கும் , இது ஏப்ரல் 2021 வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்கேட் ஏர்லைன்ஸ் விமானம் ஒவ்வொரு வியாழனும் இயங்கும் இதுவும் ஏப்ரல் 2021 வரை தொடரும். இந்த விமானங்கள் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும். சுகாதார அமைச்சகம் மற்றும் சுற்றுலா ஆணையத்தின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் கசக்கஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான விமான சேவை முதல் முறையாக இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் சுற்றலா பயணிகளுடான ஏர் அஸ்தானா விமானம் கசக்கஸ்தான் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து மத்தள விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது 164 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.