மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் கர்ணன். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அதனையடுத்து, தொடர்ந்து வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.