இந்தியா-டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் உள்ள கழிப்பறையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
எனது தியாகம் வீணாககூடாது போராட்டம் இடம்பெறும் பகுதியிலேயே என்னை புதையுங்கள் என கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களில் நால்வர் தற்கொலை செய்துகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.