24-வது தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, சமீபத்தில் 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர், 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி சாதனைப்படைத்தார். 100 மீ பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கான புகழாரம் ஓய்வதற்குள்ளாக 200 மீ ஓட்டப்பந்தயத்திலும் அவரது கொடி பறந்தது. நேற்று முன் தினம் ( மார்ச் 18) நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா செய்த சாதனையை தனலட்சுமி முறியடித்தார். 1998 ஃபெடரேஷன் கோப்பையில் பி.டி.உஷா 23.3 நொடிகளில் ஓடி முடித்ததே இன்று வரை சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கதுஇதையொட்டி அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும திருச்சியை சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துக்கள். மின்னலென ஓடும் அவரது சாதனை சிறகுகள் அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம்!
தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகள்.
மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும். https://t.co/DoDkwrjMY9
— M.K.Stalin (@mkstalin) March 20, 2021