நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில் சிக்கியுள்ளது.இதில், நைஜீரிய நாட்டு ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் இப்ராகிம் அட்டாஹிரு பலியாகி உள்ளார். அவருக்கு வயது 54. கடந்த ஜனவரியில் அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.அவருடன் பயணித்த உதவியாளர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். எனினும் அவர்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. இந்த விபத்திற்கான காரணம் பற்றியும் உடனடியாக தெரியவரவில்லை.நைஜீரியாவின் அபுஜா நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன் ராணுவ விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றபொழுது விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 7 பேரும் கொல்லப்பட்டனர்.
An air crash involving a @NigAirForce aircraft occurred this evening near the Kaduna International Airport. The immediate cause of the crash is still being ascertained. More details to follow soon.
Edward Gabkwet
Air Commodore
Director of Public Relations and Information
21/5/21 pic.twitter.com/N01V2M6qUc— Nigerian Air Force (@NigAirForce) May 21, 2021
#Nigeria’s army chief Lt Gen Ibrahim #Attahiru dies in plane crash. The @NigAirforce Beachcraft 350i conveying him and 7 others to Kaduna crashed while landing at Kaduna Int’l Airport. Attahiru, 56, was appointed army chief on 26 Jan. A fine officer. A tragic, devastating loss! pic.twitter.com/CWs2hmxPIz
— Nnamdi Obasi (@NnamdiObasi) May 21, 2021