தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையிலான குழு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகள் இறுதியான நிலையில், தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி, 4 தனி சட்டமன்றத் தொகுதிகள், 2 பொதுச் சட்டமன்றத் தொகுதிகள் என 6 சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. வானூர் (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.