போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை.
இதே போன்று புத்தாண்டு நள்ளிரவு பிரார்த்தனையிலும் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
இந்த தகவலை அவரது செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி தெரிவித்தார்.