வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினர். கிரேக் பிராத்வைட் 47 ரன்களும், ஜான் கேம்ப்பெல் 36 ரன்களும் அடித்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.வங்காளதேசத்திற்கு எதிரான 1-வது டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.