லாரன்ஸ் உடன் ஜோடி சேரும் பிரியா பவானிசங்கர் !

நடிகை பிரியா பவானி சங்கர், சின்னத்திரையில் அறிமுகமாகி இன்று கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2,

அதர்வாவின் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவின் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே, மேலும் இன்று அறிவித்த சிம்புவின் பத்து தல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்கும் படம் ‘ருத்ரன்’. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தை இயக்குவதோடு தயாரிக்கிறார் இந்நிலையில், ருத்ரன் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை ருத்ரன் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரியாவின் பிறந்தநாளான இன்று பிரியா நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவற்றை ரசிகர்கள் கொண்டாடியும், தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *