லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, 7-5, 7-5 என்ற கணக்கில் கனடாவை சேர்ந்த டெனிஸ் ஷபோவலோவை விரட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் 7-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி 6-3, 6-0, 6-7, 6-4 என்ற கணக்கில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *