உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 29,018 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது
மேலும், கொரோனாவுக்கு ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,
அங்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 659 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.