நேற்று ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மேலும் அவருக்கு கொரோனா குறித்த எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினி, அவரின் உடல்நலம் குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி ரஜினி குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில் ‘விரைவில் நலம் பெறுவாய் சூர்யா, அன்புடன் தேவா’ என பதிவிட்டுள்ளது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.