ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை என தனது டவிட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும் நடிகையுமான கவுதமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர்,
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது. தமிழகம் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது.இருந்தாலும் அவருடைய சூழ்நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்திருப்பார். அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக் கொள்கிறேன்.