மெக்சிகோவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 12 போலீசார் உள்பட 17 பேர் பலி

மெக்சிகோ சிட்டிக்கு வெளியே கோடெபெக் ஹரினாஸ் நகரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வாகனத்தின் மீது போதைபொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.இதில் வாகனத்தில் இருந்த 8 போலீசாரும், 5 அரசு வழக்கறிஞர் அலுவலக ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாக்குதல் நடந்த கோடெபெக் ஹரினாஸ் நகருக்கு அருகில் உள்ள அல்மொலொயா நகரில் நடந்த மற்றொரு தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் மெக்சிகன் அரசுக்கு அவமரியாதை என்றும் இதற்கு சட்டத்தின் ஆதரவுடன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று நாட்டின் பாதுகாப்பது அமைச்சர் ரோட்ரிகோ மார்டினெஸ்-செலிஸ் கூறியுள்ளார்.

மெக்சிகோவின் தேசிய காவல்படை, இராணுவமயமாக்கப்பட்ட போலீசும், ஆயுதப்படைகளும் குற்றவாளிகளை தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நாட்டின் முக்கிய போதைப்பொருள் விற்பனையாளர்களில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *