கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் மெக்சிகோ 13-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், மெக்சிகோவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் 1,682 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 13,575 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மெக்சிகோவில் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 18.99 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் மெக்சிகோவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1.63 லட்சத்தை நெருங்குகிறது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 14.61 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 2.75 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.