முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம்களின் அடிப்படை உரிமை மீறல் – தொடரக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிக்கை

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில்
முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின்பேச்சாளர் சுமந்திரன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் உலகின் பல நாடுகளில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் புதைக்கப்படுகின்றன மருத்துவநிபுணர்களும் இதனால் நோய் தொற்று ஏற்படுவது இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயம் குறித்து முஸ்லீம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நியாயமான நேரிய முடிவொன்றிற்கு வரவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்குள்ளது என நாங்கள் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு அவர்களிற்குள்ள உரிமையை மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும், இது தொடரக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *