
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து . யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் அமைக்க அனுமதிக்க வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை விட்டு போலீசார் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இன்று இலங்கை வடக்கு-கிழக்கு பகுதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டங்கள் காரணமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவியது இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு எதிராய் கனடாவில் திரண்ட எமது தமிழ் மக்கள் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வாகனங்களுடன் நின்றவாறு தங்களது எதிர்ப்பினை உலகுக்கு தெரியப்படுத்தினர்.