மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையும் தளபதி…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் தளபதி விஜய் , இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.இந்நிலையில் தற்போது தளபதி 66 படம் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது. ஆம், தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும்.இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் இப்படத்தை மிகவும் குறைந்த பட்ஜெட்டில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *