தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்துள்ளனர் இதனை செல்வராகவன் தனது டுவிட்டரில்.
“மீண்டும் எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார்.