மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் கடுமையான அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.மியான்மர் ராணுவத்தின் இந்த ஒடுக்குமுறைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் மியான்மர் ராணுவத்தின் இந்த ஒடுக்கு முறைக்கு போராட்டக்காரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராணுவம் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றால் உயிர் இழப்புகள் ஏற்படலாம் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.ஆனாலும் ராணுவத்தின் இந்த எச்சரிக்கையை மீறியும் மியான்மரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் வழக்கம்போல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டமும் நடத்தினர்.
போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக எங்கு பார்த்தாலும் ஒரு ராணுவ டாங்கிகள் அணிவகுத்து சென்றன.னா ஆலும் போராட்டக்காரர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் ராணுவ ஆட்சிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி சாலைகளில் பேரணியாக சென்றனர்.