தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது மேலும் மாஸ்டர் படம் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது, இப்படம் அமேசான் பிரைமில் வெளியானாலும் கூட ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.இந்நிலையில் அனிருத் இசையில் பாடல்களும் அனைவரையும் ஆடவைத்தன. அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய்யின் நடனம் வேற லெவல் எனலாம். தற்போது இப்பாடல் 25 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை சோனி மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
A TRENDING 2️⃣5️⃣ MILLION STRONG! 🔥#VaathiComingVideoSong ➡️ https://t.co/QnYnpKwIax#Thalapathy swag like none other! 😎@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @7screenstudio @XBFilmCreators #VaathiComing #Master pic.twitter.com/UZETy7gFr0
— Sony Music South (@SonyMusicSouth) February 5, 2021