விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர் , இதனை தொடர்ந்து மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.இந்தநிலையில் கன்னடத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், அடுத்தபடியாக பிரபாஸை வைத்து இயக்கும் சலார் படத்திலும் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.