மாஸ்டரை படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி தியேட்டரில் காண ஆவலோடு இருக்கிறேன் – இயக்குனர் மிஷ்கின்

நடிகர் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது.

இப்படத்தை வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

மாஸ்டர் படக்குழுவின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மாஸ்டர் வெளியீடு தொடர்பாக நடிகர் விஜய் தமிழக முதலமைச்சரை சந்தித்து

திரையரங்கு இருக்கைகளை 50 சத வீததத்தில் இருந்து 100 சத வீதமாக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தும் அதை தமிழக அரசு நிராகரித்தது குறிபிடத்தக்கது.

அந்தவகையில், இயக்குனர் மிஷ்கின், தான் மாஸ்டர் படத்தை ஜனவரி 13-ந் தேதி தியேட்டரில் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாக கூறியுள்ளார்.

அதேபோல் சினிமா பிரியர்கள் திரளாக தியேட்டருக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ள மிஷ்கின். திரையுலகை மீண்டும் செழிக்க வைக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *