யாழ். மாநகர முதல்வராகத் தெரிவாகியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தை மாநகர ஆணையாளர் கைய
ளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்துள்ளார்.
மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையே
பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்றும் தனக்கான
சம்பளத்தை மக்களின் பொது நலத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்போவதாகவும்
அறிவித்திருந்த யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தற்போது முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தையும் தான் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது
அவரது ஆதரவாளர்களிடம் அவர் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.