மறைந்த இயக்குனருக்கு மரியாதை செலுத்திய விஜய்சேதுபதி

விஜய் சேதுபதிஇயற்கை, ஈ, பேராண்மை,  ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார். நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டு உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *