மன்னார் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை சுகயீனம் காரணமாக காலமானார்

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80 ஆவது வயதில் நேற்று (01) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமானார்.குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் காலமானதாக அவர் தெரிவித்தார்.இந்நிலையில்மறைந்த ஓய்வு நிலை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சிற்றாலயத்தில் அரசியல் பிரமுகர்கள் மதகுருமார் சமூக ஆர்வலர்கள் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.யாழ் மறைமாவட்ட ஆயர்,குருமுதல்வர் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று திருவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது யாழ் மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருக்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.மன்னார் ஆயரின் இறுதி திருப்பலி திங்கள் மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.இன்று காலை 11 மணியளவில் யாழ் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மதியம் மன்னாருக்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை மாலை அவரது இறுதி திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *