யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட நகரின் சுத்தம், சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பான செயலை அறியாத் தவறாக கருதி மணிவண்ணனை விடுவித்து மாநகர சபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவண செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (09) கேட்டுக்கொண்டிருந்தார்.குறித்த விடயம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந் நிலையில் அவரை விடுவித்து தருமாறு பல்வேறு தரப்பினரும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
