போலீஸ்காரரை நோக்கி இருமிய சிங்கப்பூர் வாழ் இந்தியருக்கு 14 வாரம் சிறை

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காமல் தனது முககவசத்தை அகற்றி, போலீஸ்காரரை நோக்கி வேண்டுமென்றே இருமி தகாத வார்த்தைகளும் பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செங் தியாம், தேவராஜ் தமிழ்செல்வனுக்கு 14 வாரம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார் அத்துடன் 3 வருடங்களுக்கு வாகன ஓட தடைவிதிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *