மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 14ஆம் தேதி இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களான மணிரத்னம், சங்கர், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தனது பிறந்தநாளில் அவர்கள் கலந்துகொண்டதற்கு லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
By far the best birthday ever!!! 😊
Thank you soo much for this Sirs! 🙏 pic.twitter.com/vvdf9MuaXe— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 16, 2021