பிரேஸில் ஜாம்பவான் பீலேவின் 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சம்பியனான
பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரியல் வல்லாடோலிட்டை வீழ்த்தி 7-வது வெற்றியைப் பெற்றது.
குறிப்பாக 65-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவருமான லயோனல் மெஸ்சி ஒரு கோல் அடித்தார்.
பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த 644ஆவது (749 ஆட்டம்) கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்.
பீலே, பிரேசிலைச் சேர்ந்த சான்டோஸ் கிளப்புக்காக மட்டும் 643 கோல்கள் (656 ஆட்டம்) 1956-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடித்திருந்தார்.
அவரது 46 ஆண்டு கால சாதனைக்கு மெஸ்சி இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.