சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் உயிரிழப்பும் அதிகம். 2வது இடத்தில் இந்தியா உள்ளது. அதற்கு அடுத்து அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட நாடாக பிரேசில் 3வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் 79 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 22 ஆயிரத்து 760 ஆக உயர்வடைந்து உள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளால் 2,001 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 142 ஆக உயர்வடைந்து காணப்படுகிறது. அமெரிக்காவுக்கு அடுத்து அதிக உயிரிழப்புகளை நாடுகளின் வரிசையில் 2வது இடத்தில் பிரேசில் உள்ளது.