பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்ரோன் தனிமைப்படுத்த்திக்கொண்டு வீட்டிலிருந்து தனது பணியைத் தொடருவார் என்றும் அவருடைய திட்டமிடப்படட பயணங்கள், நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது மக்ரோனிடம் சமீபத்தில் தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரும் பரிசோதிக்கப்படவுள்ளனர் . முன்னெச்சரிக்கையாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸும் தனிமைப்படுத்தப்படுள்ளார் என்றும் செனட் அறிக்கை வெளியிட்டுள்ளது.