பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் மகன்களில் ஒருவரான ராஜீவ் கபூர் மும்பையில் இன்று காலமானார். மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மனைவி நீது கபூர் இந்தச் செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்தார்.1983 ஆம் ஆண்டு, ‘ஏக் ஜான் ஹைன் ஹம்’ என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜீவ். 1985 ஆம் ஆண்டு ‘ராம் தேரி கங்கா மைலி’ திரைப்படத்தில் நாயகன் ஆனார். இதன்பின் ‘ஆஸ்மான்’, ‘லவ்வர் பாய்’, ‘ஜபர்தஸ்த்’, ‘ஹம் தோ சலே பர்தேஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.1996ஆம் ஆண்டு ‘ப்ரேம் க்ரந்த்’ என்கிற திரைப்படத்தின் மூலம் ராஜீவ் இயக்குநராக அறிமுகமானார்.ராஜீவ் கபூரின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.